ஊக்கம் தரும் ஊட்டச்சத்து...
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஊட்டச் சத்துகளைப் பற்றி காண்போம்.
ஊட்டச்சத்து என்பது உடல்நலத்திற்கு இன்றியமையாதது. உடல்நலம் என்பது WHO-ன் படி, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது.சிறந்த உடல்நலம், நல்ல ஊட்டச்சத்தினைப் பொறுத்தது. சரியான உணவினை, சரியான அளவில் சிறந்த உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் நல்ல ஆரோக்கியத்துடனும், மனநலத்தோடும், நல்ல உற்சாகம் மற்றும் வலிமையுடனும், நோய் எதிர்ப்புத் தன்மையுடனும் வாழ்நாள் முழுவதும் வாழலாம்.உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.உணவு பலவித சத்துப்பொருட்களாலானது (Nutrients).
அவை: கொழுப்பு, புரோட்டின், தாதுக்கள், உப்பு சத்துகள், வைட்டமின்கள் மற்றும் நீர்..ஆற்றல் தரும் உணவுகள்
வேலை செய்யும் திறன் ஆற்றல் எனப்படும். ஆற்றல் அளவானது கிலோ கலோரிகள் (kcal) அல்லது மெகா ஜூல் ஆல் (MJ) அளக்கப்படுகிறது.
ஒரு கிலோகிராம் தண்ணீரின் வெப்பநிலையை ஒரு சென்டிகிரேடு உயர்த்த தேவைப்படும் வெப்ப அளவு ஒரு கிலோ கலோரி எனப்படும்.. மாவுச்சத்தின் வேலைகள்:
1 கிராம் மாவுச்சத்து 4 கலோரிகளைக் கொடுக்கிறது.
மாவுச்சத்து தினசரி தேவைகளில் 50% அல்லது அதற்கு அதிகமான அளவு பூர்த்தி செய்கிறது..
தாதுக்கள் (அ) தாது உப்புகள்:
மனித உடல் எடையில் 4 - 5% தாது உப்புகளாகும். இவை மனிதனின் உடல் இயக்கத்திற்கும், உறுதியான உடல் அமைப்பிற்கும், கடத்தியாகவும், நோய் எதிர்ப்பிற்கும் உதவுகிறது.கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் வேலைகள்
தசைகள் சுருங்கி விரிவதற்கு தேவைப்படுகிறது.
செல்லின் சவ்வூடு திறனுக்கு மிகவும் இன்றியமையாதது.
சில நொதிகளின் செயலினை தூண்டிவிட கால்சியம் இன்றியமையாதது.வைட்டமின்கள்
வைட்டமின்கள் உடல்நல கட்டுபாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் உதவுவனவாகும்.
வகைபாடு : இரண்டு வகைகள்
1. நீரில் கரையக்கூடியவை 2. கொழுப்பில் கரையக்கூடியவை
கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்கள்
விட்டமின் A, D, E, K ஆகியன கொழுப்பில் கரையக்கூடியது.
விட்டமின் A
இது விலங்கு மற்றும் தாவர உணவுகளில் உள்ளது.
வேலைகள்
1. இது கண்பார்வைக்கு அவசியமானது.
2. இது மாலைக்கண் நோயைத் தடுக்கிறது.
3. இது சிராஃப்தால் மியாவை (Xerophalmia) தடுக்கிறது.