அனைத்து வித பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி !!

Update: 2024-09-24 06:45 GMT

Red Hibiscus

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செம்பருத்தி தாவரத்தில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன. செம்பருத்திப் பூக்கள் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை உடையதாக இருக்கும்.

செம்பருத்தி தாவரத்தின் வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைந்ததுதான்.


இதன் இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை. 

செம்பருத்தி இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.


செம்பருத்தி இதழ்களை பத்து அல்லது பதினைந்து இதழ்களை எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அதில் சிறிதளவு அரிசிமாவு சேர்த்து பேஸ்பேக் போடுவதனால் முகம் பளபளக்கும், கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகான தோற்றத்தை தரும். சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவையாகும். 


மாதவிடாயைத் தூண்டக் கூடியது. இலைகளை அரைத்து குளிக்கும் பொது ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி. முடிக்கு நல்லது. இதழ்களின் உள்ள சாறு சிறுநீர்ப் போக்கு வலியை நீக்கும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது.

உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க 1/2 டீஸ்பூன் தேனுடன் சிறிதளவு செம்பருத்தி பொடி கலந்து சாப்பிடலாம். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம். 



 


Tags:    

Similar News