சந்தனம் சருமத்தின் நன்மைகள் : சந்தனம் வைத்து பேஸ் பேக் - முகம் ஜொலிக்கும் !!
சந்தனம் இயல்பாகவே குளிர்ச்சியான ஒன்றாகும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாகவும், பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும்.
ஒரு கிண்ணத்தில் சந்தன பவுடருடன் சிறிது ரோஸ் வாட்டரைக் கலக்கவும். பின்னர் இந்த கலவையை எடுத்து உங்கள் முகத்தில் தடவவும். இந்த பேக் எண்ணெய் பசை சருமம் இருப்பவர்களுக்கு நல்ல பலனை தரும்.
உங்கள் சருமத்தில் முகப்பருவை குறைக்க, சிறிது சந்தனப் பொடியை எடுத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட்டை தயாரித்து, அதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை கழுவவும்.
உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் நீங்கள் பால் அல்லது ஆலிவ் எண்ணெய், ஆரஞ்சு பழச்சாறுடன் சந்தனப் பொடியையும் கலந்து, முகத்தில் அப்ளை செய்து அது காய்ந்தவுடன் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவலாம்.
டல்லான முகத்தை பிரகாசமாக்க சிறிது தயிர், பால் மற்றும் சந்தனப் பொடியை ஒன்றாக கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து விட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். சருமம் மென்மையாவதோடு, வெள்ளையாகும்.
உங்கள் சருமம் வயதான தோற்றத்தில் இருந்தால் முட்டையின் வெள்ளை கரு, தயிர், மற்றும் சிறிது ஆப்பிள் ஜூஸ் மற்றும் சந்தனப் பொடி ஆகியவற்றைக் கலந்து, உங்கள் சருமத்தில் தடவி உலர்ந்த பின்னர் கழுவவும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் இளமையான சருமத்தை பெறலாம்.