பற்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்போ இதை பண்ணுங்க !

Update: 2024-03-18 10:36 GMT

பற்கள் ஆரோக்கியம் 

ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என இருமுறை பல் துலக்குவது மிகவும் அவசியம். பற்கூச்சம் போன்ற பிரச்னை உள்ளவர்கள் சாஃப்ட் வகை டூத் பிரஷ்களையும், மற்றவர்கள் மீடியம் வகை பிரஷ்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

பல் வரிசையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சுத்தம் செய்ய வசதியாக கைப்பிடி நன்றாக சௌகரியமாக இருக்க வேண்டும். அது மாதிரியான டூத் பிரஷ்களை மட்டுமே வாங்க வேண்டும்.

நாக்கில் உள்ள பசையை அகற்ற வேண்டும். 60 முதல் 90 நாட்களுக்கு ஒரு முறை பிரஷை மாற்றுவது நல்லது.

என்னதான் பல் தேய்த்தாலும் சிலருக்கு பற்களில் மஞ்சள் கறை படியும். பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பாரம்பரிய காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவு டீ மற்றும் காபி குடிப்பது, புகை பிடிப்பது ஆகியவற்றை காரணமாக கூறலாம்.

பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க இயற்கையான வழிகள் உள்ளன. பற்களை எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து தேய்த்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறை படிப்படியாக நீங்கும். எலுமிச்சம் பழ தோலைக் கொண்டு பற்களை துலக்கி குளிர்ந்த நீரில் பற்களை கழுவினால் கறைகள் நீங்கி பிரகாசமாக தெரியும்.

ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் சி சத்து பற்களில் உள்ள கறைகளை நீக்கி விடும். இயற்கையான கரும்பு, அன்னாசிப்பழம் போன்ற சில உணவுப் பொருட்கள் நம்முடைய பற்களை சுத்தம் செய்யும் தன்மைகொண்டது.

உங்கள் பல் மருத்துவரை வருடத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு முறை சந்தியுங்கள். இது உங்கள் பற்களை சிறந்த முறையில் பாதுகாக்க உதவும்.

இயற்கையான நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 15 முதல் 20 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு அந்த எண்ணெயை வெளியே துப்பிவிட வேண்டும். பிறகு சுத்தமான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ஆயில் புல்லிங் செய்து முடித்த பிறகு பிரஷ் செய்வதும் வாயை நன்றாக சுத்தம் செய்தால் பற்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். உங்க பளிச் சிரிப்பை பார்த்து மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள்.

Tags:    

Similar News