உடம்புக்கு முடியலையா, இந்த ஜூஸ் குடித்தால் ஜம்முனு இருக்கும்!!!

Update: 2024-04-05 10:42 GMT

ஜூஸ் 

அன்னாச்சி ஜூஸ்: இதில் அலர்ஜி எதிர்ப்பு நொதி பொருள்கள் அதிகமிருக்கின்றன. இது தொண்டை சளி பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கும். மேலும் மூச்சு பிரச்னையையும் சீராக்கும். இஞ்சி மஞ்சள் ஜூஸ்: இஞ்சி மற்றும் மஞ்சள் என அலர்ஜி எதிர்ப்பு பொருள்கள் கலந்திருப்பது மட்டுமின்றி இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் பொருள்களும் இருக்கின்றன. எனவே இது அலர்ஜியை தவிர்த்து உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும். தர்பூசணி ஜூஸ்: வெயில் காலத்தில் யாராலும் தவிர்க்கவே முடியாத தர்பூசணி பழத்தின் ஜூஸ், வெறும் நீர்ச்சத்து மட்டுமின்றி உங்களுக்கு வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவற்றை அதிகம் வைத்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும். ஆரஞ்சு ஜூஸ்: இதில் வைட்டமின் சி அதிகமிருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க முக்கிய கூறாகும். குறிப்பாக, இது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்து, தொற்றுக்கு எதிராக வலுவுடன் போராடும். பீட்ரூட் ஜூஸ்: இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணு மற்றும் வெள்ளை அணுக்களை அதிகரிக்க உதவும். இதனால் உங்கள் ரத்த ஓட்டம் சீராகி, நோய் எதிர்ப்பு சக்தியும் பலமடையும். கேரட் ஜூஸ்: வைட்டமின் ஏ இதில் அதிகம் இருக்கிறது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமின்றி கண்பார்வையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

Tags:    

Similar News