வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் !!
பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வலி நிவாரண மாத்திரைகள் சிலர் என்ன உடல் வலி என்றாலும் உடனேயே வாயில் நுழையாத வார்த்தையை கூறி ஒரு மாத்திரையை வாயில் போட்டு விடுவார்கள். சிலர், அவர்களது பர்ஸ் அல்லது கைப்பையில் எப்போதுமே இந்த வலிநிவாரண மாத்திரைகளை வைத்திருப் பார்கள். இதனால் அந்த நேரத்தில் வலி குறைந்தாலும் கூட இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
வலி நிவாரணி மாத்திரை உட்கொள்வதால் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பெராக்சைடு கல்லீரல் சேதம் ஏற்படுகிறது. எட்டுக்கும் அதிகமான அளவில் வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்வதால் கல்லீரலில் மிகுதியான சேதம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் வலி நிவாரணி மது அருந்துவோர் கட்டாயம் மாத்திரையை உட்கொள்ள கூடாது.
இப்யூபுரூஃபன்,ஆஸ்பிரின் மற்றும் நேப்ரோஜென் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளினால் ஏற்படும் எரிச்சலின் காரணமாக வயிறு வலி, அல்சர் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வலி நிவாரண மாத்திரை உட்கொள்ளும் நபர்கள் மத்தியில் மன அழுத்தம் பாதிப்பு அதிகம் இருக்கிறது. மேலும் அதிகமாக வலிநிவாரணி மாத்திரை உட்கொள்வதால் சிறுநீரகம் பாதிப்படைகிறது.
வலி நிவாரணி மாத்திரையால் ஏற்படும் நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. கருவுற்ற முதல் இருபது வாரங்களில் வலிநிவாரணி மாத்திரை எடுத்துக் கொள்ளவே கூடாது, இதனால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அடிக்கடி வாயுத்தொல்லை ஏற்படுவதற்கு வலிநிவாரணி மாத்திரையும் கூட ஓர் காரணமாக இருக்கிறது. இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வலி நிவார மாத்திரைகளை எடுத்து கொள்வதை தவிர்த்து விடுங்கள்.