தோல் நோய்கள் எதனால் தோன்றுகிறது? அதனை சரி செய்யும் வழிமுறைகள் ?
தோல் நோய்கள் அசைவ உணவு அதிகம் உண்பவர்களுக்கும் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் உடலில் வெயில் படாதவாறு வாழ்பவர்களுக்கும் ஏற்படுகின்றன.
எந்த ஒரு நோய்க்கும் நேரடியாக மருந்தை நாடாது நோய்க்குரிய காரணங்கள் என்னென்னவென்று சிந்தித்து காரணங்களை தவிர்க்க முயல்வதே நோய் நீங்குவதற்குரிய நிரந்தர தீர்வை காண்பதாகும்.
எனவே அசைவ உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மலச்சிக்கலை போக்க காலையில் எழுந்ததும் வயிறு நிறைய குளிர்ந்த தண்ணீர் அருந்த வேண்டும்.
காலை மாலை எனிமாக்குவளை மூலம் எனிமா எடுக்க வேண்டும். மலச்சிக்கலை நீக்கும் நார் சத்துள்ள காய்கறிகள் கீரைகள் கனிகள் நம் உணவில் அதிகம் சேர வேண்டும். சூரிய ஒளி உடலில் படும்படி உழைக்க வேண்டும் அல்லது உலாவி வர வேண்டும்.
காலை மாலை இரு வேலைகளும் குளிர்ந்த தண்ணீரில் குளித்து இயற்கை உணவு பகலில் ஒரு வேலை சமைத்த சைவ உணவும் உண்டு வரவேண்டும். வாரம் ஒரு முறை மண் குளியல் அல்லது வாழை இலை குளியல் எடுத்து உடலை தூய்மைப்படுத்த வேண்டும்.
நாள்தோறும் சூரிய ஒளி குளியல் எடுத்து வர வேண்டும். பப்பாளி பழம் இயற்கை உணவு அதிகம் சேர்க்க வேண்டும் மா பிஞ்சை அறைத்து தடவுவதால் சொறி சிரங்கு தோல் நோய்கள் குணமாகும்.
குளிப்பதற்கு எந்த விதமான சோப்பும் பயன்படுத்த வேண்டாம். மாறாக சீயக்காய் தூள், அரப்புத்தூள், கடலை மாவு பாசிப்பயறு மாவு ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.
இல்லையெனில் ஈரத்துண்டை மேனி முழுவதும் நன்கு தேய்த்து குளிக்கலாம். மருந்தோன்றி இலையை காய வைத்து தூள் செய்து உடலில் பூசி குளித்து வரலாம்.