வாழைப்பழத்தோலில் இவ்வளவு நன்மைகளா?
பழங்கள் மற்றும் காய்கறிகள் மனித உடலுக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பழத்தைத் தவிர, பழத்தின் தோல்களிலும் அதிக சத்துக்கள் நிரம்பியுள்ளன.இது பழத்தை விட ஆரோக்கியமானதாக இருக்கும் என்பதற்கு உதாரணம் வாழைப்பழம்.வாழைப்பழத்தோலில் உள்ள சிறப்பு அம்சங்கள், இரத்த அணுக்களின் சிதைவைத் தடுத்து வலுப்படுத்துகிறது. இரத்தத்தை சுத்திகரிப்பதில் உதவுகிறது.மனச்சோர்வு குறையும்: வைட்டமின் B6 மற்றும் உயர் டிரிப்டோபன் உள்ளடக்கம் கொண்ட வாழைப்பழத்தின் தோல், மனச்சோர்வு மற்றும் மனநிலைக் கோளாறுகளை மட்டுப்படுத்த உதவும்.புற்றுநோய் தடுப்பு: வாழைப்பழத்தோலை அதிகம் உட்கொள்வது ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரித்து, புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. கண்களை பாதுகாக்கும் வாழைப்பழத் தோல்: கண்களுக்கு கீழே வாழைப்பழத்தோலை கொண்டு சில நிமிடங்கள் மசாஜ் செய்தால், கண்களுக்கு கீழே இருக்கும் வீக்கத்தைக் குறைக்க உதவும். அது மட்டுமல்ல, இதனால் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மறைந்து முகம் பொலிவடையும். கொலஸ்ட்ரால் குறையும்: வாழைப்பழத்தோலில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன, இந்த நார்ச்சத்துக்கள், கொலஸ்ட்ராலைக் குறைத்து, தமனிகளின் சுவர்களில் கொழுப்பு ஒட்டிக்கொள்ளாமல் தடுக்கின்றன.பற்களை ப்ளீச் செய்யும்: வாழைப்பழத் தோலைக் கொண்டு அவ்வப்போது பற்களை மசாஜ் செய்தால், அதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் பற்களை வெண்மையாக்கும்.பருக்களைப் போக்கும் வாழைப்பழத் தோல்: வாழைப்பழம், சருமத்தில் ஏற்படும் தொய்வைக் குறைக்க உதவுவம். மேலும் வாழைப்பழத் தோலில், பருக்கள் மற்றும் முகப்பருக்கள் ஏற்படாமல் தடுக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.