சிசேரியன் காயங்கள் குணமடைய சில டிப்ஸ்!!!

Update: 2024-04-15 11:08 GMT

ஒரு சிலருக்கு சுக பிரசவம் ஏற்படுவது போலவே, சிசேரியன் எனப்படும் சி-செக்ஷன் எனும் சிசேரியன் பிரசவமும் நடைபெறுவது வழக்கம். இந்த முறையில், குழந்தை பிறந்த பின்பு, இதற்காக மேற்கொண்ட சிகிச்சையின் தையல் ஆறுவதற்கு சில சிகிச்சையை, அறுவை சிகிச்சை பிரசவ முறை என்றும் கூறுவர். இந்த முறை, நான்கு நூற்றாண்டுகளாகவே தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வருகிறதாம். 1970களில் ஆங்காங்கே நடைப்பெற்ற சிசேரியன் பிரசவங்களின் விகிதங்கள் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளன. சுக பிரசவத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டால், தாய் மார்கள் சிசேரியன் பிரசவத்தை தேர்வு செய்யலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தாய்-சேயின் உயிருக்கு ஆபத்து இருக்கும் நிலையில், இந்த முறை தேர்ந்தெடுக்கப்படுகிறது. சிசேரியன் நேரத்தை விட, அதற்கு அடுத்த நேரங்களில் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 1.நல்ல ஓய்வு: எந்த அறுவை சிகிச்சைக்கு பிறகும், நன்றாக ஓய்வெடுக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால் புதிதாக குழந்தை பிறந்திருக்கும் போது எந்த தாய்மார்களுக்கும் ஓய்வெடுப்பது என்பது சிரமம்தான். குழந்தை எப்போதெல்லாம் உறங்குகிறதோ அப்போதெல்லாம் அவர்களும் உறங்கி ஓய்வெடுப்பது மிகவும் முக்கியமாகும். 2.நடைப்பயிற்சி: உடற்பயிற்சி செய்வதோ, எடை அதிகமான பொருட்களை தூக்குவதோ அறுவை சிகிச்சை செய்த புதிதில் செய்வது கடினமாகும். முடிந்த அளவிற்கு ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது நடைப்பயிற்சி செய்து பழகலாம். 3.தொற்று: அறுவை சிகிச்சை செய்த 24 மணி நேரத்திற்கு இன்ஃபெக்‌ஷன் ஏதேனும் ஆகியிருக்கிறதா என மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பர். அதன் பிறகும் கூட, அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. 4.மலச்சிக்கல்: குழந்தை பிறப்பு, குழந்தை பிறந்ததற்கு பிறகு ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகள் காரணமாக மலச்சிக்கல் ஏற்படலாம். அதே சமயத்தில் வெகு நேரம் படுத்தே இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படலாம். அதனால் நன்றாக தண்ணீர் குடித்து, மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிகவும் நல்லதாகும்.

Tags:    

Similar News