மாரடைப்பு வருவதை தடுக்கும் சோயா பீன்ஸ்!

Update: 2024-05-11 10:11 GMT

சோயா பீன்ஸ் 

சோயா பீன்ஸில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்ச்சத்து, பி வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், பொட்டாஷியம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன. அதே போன்று, சோயா பால் தோற்றத்திலும் குணாதிசயத்திலும் பண்ணை பால் போலவே உள்ளது.

பல்வேறு வயதில் உள்ளோருக்கும் தேவையான 9 வகை அமினோ அமிலங்களைக் கொண்டுள்ள புரோட்டீனை வழங்கும் ஒரே தாவர உணவாகும். பால் பானங்களைத் தவிர்க்க விரும்புவோருக்கு மாற்று பானம் சோயா புரோட்டீன் பானம்தான். சோயாவிலுள்ள PUFA எனப்படும் Poly Unsaturated Fatty Acids இரத்த அழுத்தத்தை ஒழுங்கு படுத்துகிறது.

சோயாவில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள சர்க்கரைார்ச்சத்வைக் கட்டுப் படுத்துகிறது. சோயா உணவு அளகொலஸ்ட்ரால் என்னும் LDL (Low Density Lipo proteins) அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் HDL (High Density Lipoproteins) அளவைக் கூட்டுவதன் மூலம், மாரடைப்பைக் குறைக்கிறது.

தினசரி சோயா உட்கொள்வதன் மூலம் பல்வேறு வகையான புற்று நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

முக்கியமாக நாள்பட்ட பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துவதில் சோயா பெரும் பங்காற்றுகிறது. சோயா உணவு மாதவிடாய் நின்ற பின் உடலில் ஏற்படும் சங்கடங்களைக் குறைத்து, எலும்புகளின் சீரழிவைத் தடுக்கிறது.

சோயா உடல் முதிர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது. இரும்புச்சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளதால், இவ்வுணவு கர்ப்பிணிப் தி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்றது.

அனைத்துப் பருப்புகளிலும் உள்ள புரதச் சத்தைவிட மும்மடங்கு புரதச்சத்து சோயாவில் அடங்கியுள்ளது.

மிக டே விளையாட்டு வீரர்களுக்கும் இது அவசியமான ஊட்டச்சத்து உணவு.

Tags:    

Similar News