தெருவோரங்களிலும், வயல்களிலும் வளர்ந்து இருக்கும் மூலிகை நிறைந்த மூக்கிரட்டை கீரை !!

Update: 2024-10-26 12:20 GMT

மூக்கிரட்டை கீரை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நம் நடத்து செல்லும் பாதையில் சாதாரணமாக இருக்க கூடிய ஒருவகை களைச்செடி தான் இந்த மூக்கிரட்டை கீரை. தெருவோரங்களிலும், வயல்களிலும் சாதாரணமாக வளர்ந்து கிடக்கும் இந்த கீரையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கு. இந்த கீரையை உணவில் எடுத்து கொள்ளலாமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு உண்டு. ஆனால் நமது முன்னோர்கள் இந்தக்கீரையை கலவை கீரையாக உணவில் சேர்த்து வந்துள்ளதாக தகவல் கூறுகின்றன.


மூக்கிரட்டை செடி கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை உடலில் இருந்து முழுவதும் வெளியேற்றி, மனிதர்களின் உடல் நலம் காக்கும் ஒரு அபூர்வ மூலிகையாகும். இந்த மூக்கிரட்டை புற்றுநோய் மற்றும் புற்றுநோய்களை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடியது.


மூக்கிரட்டை கீரையை சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். மூலக்கட்டி இருந்தாலும் சுருங்கி பூரணமாக குணமாகும். மூக்கிரட்டை கீரை உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கீல்வாதம், இரைப்பு, இதய நோய்கள், மண்ணீரல் வீக்கம், காச நோய் போன்றவற்றையும் இது கட்டுப்படுத்தும்.

மூக்கிரட்டை வேரோடு மிளகு சேர்த்து, விளக்கெண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அரைத் ஸ்பூன் அளவு பருக, சரும நோய்கள் குணமாகும். சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், அதை கரைத்துவிடும் தன்மை கொண்டது இந்த மூக்கிரட்டைக் கீரை. மூக்கிரட்டை இலைகளை அவ்வப்போது சமைத்து சாப்பிட்டு வர, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பாதிப்புகள் முற்றிலும் குணமாகும்.


மூக்கிரட்டை வேரைத் தூளாக்கி, அதை தினமும் இருவேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர, மங்கலாகத் தெரியும் கண் பார்வைக் குறைபாடு மற்றும் மாலைக்கண் பாதிப்புகள் போன்ற கண் வியாதிகள் யாவும் விலகி விடும்.


மூக்கிரட்டையுடன் சீரகம், பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் குறையும். மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் நீர் தேங்கி வயிறு பெரிதாக காணப்படும். அந்த நீரை வெளியேற்ற மூக்கிரட்டை கீரை நல்ல பயனை கொடுக்கிறது.



 


Tags:    

Similar News