சிறுநீரகக் கல் பிரச்சனையின் அறிகுறிகள் !!

Update: 2024-05-30 12:20 GMT

சிறுநீரகக் கல் பிரச்சனை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிறுநீரக கற்கள் என்பது சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீராக குழாயிலோ உண்டாகும் சிறிய படிகங்கள் போன்ற திடப்பொருள் ஆகும் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும் இந்த பிரச்சனை இனி ஒரு சில அறிகுறிகள் மூலம் நாம் கண்டறியலாம்.

சிறுநீரகப் பிரச்சனை கொண்டவர்கள் முதுகு வலி மற்றும் பின்பக்க விலா எலும்பில் அதிகப்படியான வலியை சந்திக்கின்றனர். சிறுநீரகப் பாதையில் இந்த கற்கள் பயணிக்கும் போது உண்டாகும் அழுத்தம் இந்த அதிக வலிக்கு காரணமாகிறது. சிறுநீர் கழிக்க முயற்சிக்கையில் சிறுநீர் பாதையில் உள்ள கற்கள் நகரத் துவங்கி சிறுநீர் குழாயில் உராய்வினை ஏற்படுத்துகிறது. சிறுநீர் குழாயில் ஏற்படும் இந்த உராய்வு எரிச்சலுக்கு காரணமாகிறது.

சிறுநீரக கற்கள் கொண்டவர்கள் பெரும்பாலும் குளிர் காய்ச்சல் போன்ற பிரச்சனையாலும் பாதிக்கப்படுகின்றனர் எனினும் சிறுநீரகப் பிரச்சனையால் மட்டுமே இந்த காய்ச்சல் வருகிறது என நாம் ஒப்புக்கொள்ள முடியாது சிறுநீரக கற்கள் பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் சிறுநீர் கழிக்கையில் ரத்தம் சேர்ந்து வெளியேறுகிறது மேலும் இந்த ரத்தமானது சிவப்பு இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்.

சிறுநீர் கல் பிரச்சினை கொண்டவர்கள் சிறுநீர் கழிக்கையில் அளவுக்கு அதிகமான துர்நாற்றம் வீசுகிறது மேலும் இது சிறுநீரகப் பாதை தொற்றுக்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. சிறுநீர் பாதையில் சிறுநீரக கற்கள் ஏற்படுத்தும் அடைப்பு சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை உண்டாக்குகிறது சிறுநீர் ஓட்டத்தை இந்த கற்கள் அடைப்பதால் சில சமயங்களில் சிறுநீரகப் பாதை முடிச்சுகளும் உண்டாகிறது.

சிறுநீரக கற்கள் கொண்டவர்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தி வருவது இயல்பான விஷயமாகும். சிறுநீரகம் மற்றும் இரைப்பை பாதைக்கு இடையே உள்ள நரம்புகளில் ஏற்படும் அழுத்தம் வாந்திக்கு வழி வகுக்கிறது. சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் வழக்கத்தை விட அதிக அளவு சிறுநீர் கழிப்பறை செல்வர் அறிவியல் பார்வையில் அது சிறுநீர்பாதையின் கீழ் பகுதியில் கல் நகர்ந்திருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News