நீங்கள் சாப்பிடும் உணவு செரிக்கவில்லை ? உடலில் அமிலத்தன்மை அதிகமாகி பல நோய்கள் வர வாய்ப்பு இருக்கு !!
By : King 24x7 Angel
Update: 2024-05-16 10:27 GMT
உடலில் காரத்தன்மை 70% அமிலத்தன்மை 30% சதவீதமும் இருக்க வேண்டும். ஆனால் உண்ட உணவு செரிக்கவில்லை எனில் உடலில் அமிலத்தன்மை அதிகமாகி பல நோய்களுக்கு காரணமாகிறது.
உடலில் அதிகமான அமிலத்தன்மையை குறைக்க காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வயிறு நிறைய குளிர்ந்த நீர் அருந்த வேண்டும்.
பின் பல் துலக்கியதும் சாம்பல் பூசணி சாறு, வாழைத்தண்டு சாறு, கேரட் சாறு ,அருகம்புல் சாறு ஆகியன அருந்தலாம். இருவேளைகளும் குளிர்ந்த தண்ணீரில் குளித்து வரவேண்டும்.
பின்னர் யோகாசனப் பயிற்சிகள் செய்து வந்தால் நல்ல செரிமானம் ஏற்பட்டு உடலில் அமிலத்தன்மை குறையும். காலை மாலை இருவேளைகளும் கனி வகைகள் நிறைந்த இயற்கை உணவும் பகலில் மட்டும் சமைத்த சைவ உணவு உண்டு வரவேண்டும். இரவு உணவை 7 மணிக்குள் முடித்து விட வேண்டும்.