தைராய்டு பிரச்சனைக்கு இந்த உணவுகள் போதும்!!!
தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி ஆகும். இந்த சுரப்பி தான், தைராய்டு ஹார்மோன்களை சுரக்கிறது. தைராய்டு சரியாக செயல்பட வேண்டுமானால், அதற்கு மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன.தைராய்டு ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் சென்று உடலின் திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சுரப்பில் பிரச்சினை ஏற்பட்டால், அதற்கு தைராய்டு சுரப்பியை இயக்கும் உடல் பாகங்கள் காரணமாகவும் இருக்கலாம். அதோடு, ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்பட்டால், முழு உடலும் பாதிக்கப்படும். மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகளின் சரியான செயல்பாட்டிற்கு இந்த ஹார்மோன்கள் அவசியம் ஆகும்..ஹைபோதைராய்டிஸம் (Hypothyroidism): இது உடல் இயக்கத்தை மந்தப்படுத்திவிடும்.தைராய்டு சுரப்பி போதுமான அளவு தைராய்டு ஹார்மோன்களை சுரக்காமல் இருக்கும் நிலையை ஹைப்பர் தைராய்டிஸம் என்று சொல்வார்கள். ஹைபர்தைராய்டிஸம் (Hyperthyroidism): இது, உடலின் அனைத்து இயக்கங்களின் வேகத்தை கூட்டும்.உடலின் தேவைக்கு அதிகமான அளவு ஹார்மோன்கள் சுரப்பது, ஹைபர்தைராய்டிஸம் எனப்படுகிறது. ஹைப்போ தைராய்டிசம் அல்லது ஹைப்பர் தைராய்டிசம் இருப்பது கண்டறியப்பட்டால், உணவில் சில ஊட்டச்சத்துக்களைச் சேர்க்க வேண்டும்.அவை: 1.வைட்டமின் ஈ: ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கவும் வைட்டமின் ஈ அவசியம் ஆகும்.சூரியகாந்தி விதைகள் மற்றும் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.2. செலினியம்: பாதாம், முந்திரி, பூசணி விதைகள், ஓட்ஸ், டார்க் சாக்லேட், பீன்ஸ் போன்றவற்றில் மெக்னீசியம் உள்ளது. இது தைராய்டு ஹார்மோன் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கான என்சைம் செயல்பாட்டை ஆதரிக்கிறது.3.வைட்டமின் பி: தைராய்டு செயல்பாட்டை ஆதரிக்கும் வைட்டமின் பி உடலுக்கு மிகவும் அவசியமானது. கோழி, டுனா, வேர்க்கடலை மற்றும் சூரியகாந்தி விதைகளில் காணப்படுகிறது.4.வைட்டமின் சி: வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் தைராய்டு சமநிலைக்கு அவசியமானது.கிவி, பெல் பெப்பர்ஸ், ப்ரோக்கோலி, பிரஸ்ஸல்ஸ் முளைகட்டிய தானியங்கள் ஆகியவற்றில் காணப்படுகிறது.