ஒற்றை தலைவலி அதிகமா வருதா அப்போ இது தான் காரணம் !!
தலைவலியை காட்டிலும் ஒற்றைத் தலைவலி மிக மோசமான வலியைத் தரக்கூடியது. நாள் கணக்கில், இரண்டு மூன்று நாட்கள் வரை கூட இருக்கும். இந்த ஒற்றை தலைவலி ஏன் வருகிறது, அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
இந்த ஸ்மார்ட்போன் பயன்பாடுகளின் ஆதிக்கம் பெருகிய பிறகு, வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே தலைவலி ஏற்படுகிறது. சாதாரணமான தலைவலி 1 முதல் 2 மணி நேரம் மட்டுமே நீடிக்கும்.
ஓய்வெடுப்பதன் மூலமோ அல்லது வலி நிவாரிணிகளை பயன்படுத்துவதன் மூலமோ இந்த தலைவலியை எளிதில் விரட்டியடிக்கலாம். ஆனால், ஒற்றைத் தலைவலி சாதாரண தலைவலியை காட்டிலும் சற்று கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடியது.
ஒற்றைத் தலைவலியின் அறிகுறியானது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம். பெரும்பாலும், இந்த அறிகுறிகள் முழுக்க முழுக்க தலைவலி ஏற்படுவதற்கு சில நாட்கள் அல்லது மணிநேரங்களுக்கு முன்பே தென்படுகிறது.
இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், ஒற்றைத் தலைவலி அறிகுறிகள் மோசமடைவதை முடிந்தவரை தடுக்க முடியும்.
பார்வைப் புலத்தில் மாற்றங்கள் ஏற்படுவது , அதீத மற்றும் நீடித்த வலி , சிலருக்கு ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் குமட்டல் ,வாந்தி ,மயக்கம்வயிற்று, வலிசோர்வு ,பேச்சில் தடுமாற்றம் , கடுமையான பசிதாகம் , கவனம் சிதறல் , காய்ச்சல் , வயிற்றுப்போக்கு , அடிக்கடி சிறுநீர் கழித்தல் , முகம் அல்லது கைகால்களில் உணர்வின்மை , உடலின் வெப்பம் அதிகரிப்பது , ஹார்மோன் மாற்றங்கள், உணவு , பார்வை நரம்புகளில் பாதிப்ப ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.