முகத்தில் ஏற்படும் கருந்திட்டுகள் மறைய டிப்ஸ் !!

Update: 2024-12-20 11:47 GMT

dark spots 

முகத்தில் ஆங்காங்கே கருந்திட்டுகள் உண்டாகி முக அழகை கெடுக்கக்கூடும். இந்த திட்டுக்களை எளிதாக மறைய வைக்கலாம்.

தேவையான பொருட்கள்

குங்குமப்பூ - 4

பால் - 2 டீஸ்பூன்

மஞ்சள் - 1 சிட்டிகை


குங்குமப்பூ கரும்புள்ளிகள், கறைகள் மற்றும் கருந்திட்டுக்களை குறைக்க உதவும். அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள், சருமத்தில் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து பாதுகாத்து வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கும்.


பாலில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்து இறந்த சரும செல்களை நீக்க பயன்படுகிறது. மேலும், சருமத்தை மென்மையானதாகவும் மாற்றக்கூடும்.


சரும நிறத்தை மேம்படுத்தவும், கரும்புள்ளிகளை குறைக்கவும் மஞ்சள் உதவுகிறது. அவை கண்களை சுற்றிலும் உண்டாகும் கருவளையத்தை போக்கிட பெரிதும் உதவியாக இருக்கும். சருமத்தை மென்மையாகவும், உறுதியாகவும் மாற்றக்கூடும்.

முதலில் இரவு முழுவதும் குங்குமப்பூவை நீரில் ஊறவையுங்கள். பிறகு ஊறவைத்த குங்குமப்பூவை வெதுவெதுப்பான பாலில் சேர்க்க வேண்டும். அடுத்து, மஞ்சளை சேர்த்து கெட்டியான பேஸ்ட் தயாரிக்க வேண்டும்.


இந்த குங்குமப்பூ - மஞ்சள் கலவையை முகத்தில் தடவி 20 முதல் 25 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.

பிறகு கலவையை தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும். பால் மற்றும் மஞ்சள் வாசனையை நீக்கிட மைல்டு க்ளென்சர் பயன்படுத்த செய்யலாம். வாரத்திற்கு 3 முறை பயன்படுத்த வேண்டும். இரண்டு வாரத்தில் கருந்திட்டுக்கள் மறைந்து சுத்தமான மற்றும் அழகான சருமத்தை பெற முடியும்.

Tags:    

Similar News