பற்கள் ஹெல்தியா இருக்க டிப்ஸ் !!!
1.ஆரோக்கியமான உணவுகள்: பற்களின் ஈறுகளில் பிரச்னை வருவதும், பற்கள் சொத்தைதையாவதற்கும் முக்கிய காரணம் இனிப்புகளை அதிகம் சாப்பிடுவதும், அமில உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் வருகிறது. எனவே, பழங்கள், காய்கறிகள், பால் சார்ந்த உணவு பொருள்களை சாப்பிடுங்கள். இது கால்சியம், வைட்டமின் சி மற்றும் பாஸ்பரஸ் போன்ற பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் ஊட்டச்சத்துகளை உங்களுக்கு அளிக்கும். 2. மருத்துவரை சந்தியுங்கள்: அடிக்கடி பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். வீட்டு வைத்தியங்கள் மட்டுமின்றி மருத்துவரை அணுகி சரியான ஆலோசனை பெறுவதும் உங்களின் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். 3.பல் துலக்குங்கள்: தினமும் இரண்டு வேளை பல் துலக்குங்கள். அனைத்து பற்களிலும், மூளை முடுக்கெல்லாம் பல் துலக்க வேண்டும். வாய் கொப்பழிப்பது, நாக்கை சுத்தப்படுத்துவது ஆகியவையும் உங்களின் பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 4.பழக்கவழக்கம்: புகைப்பிடித்தல் மற்றும் புகையிலையை மெள்ளுதல், குட்கா, பான் மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்துவது உங்களின் பற்களின் கறையை மட்டுமே ஏற்படுத்தாது, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும், ஈறு சேதமாகவும், பற்களை இழக்கவும் நேரீடும். வாய் புற்றுநோய் ஆபத்தும் இதில் இருக்கிறது. மதுகுடிப்பதும் உங்களின் பற்களில் பிரச்னையை ஏற்படுத்தும். 5.தண்ணீர் குடியுங்கள்: நாள் முழுவதும் அதிகமாக தண்ணீர் குடியுங்கள். இதன் மூலம், உங்களின் வாயில் இருக்கும் உணவு பொருள்கள் வெளிவரும், இதனால், உங்களின் வாயின் அமில அளவு சரிசமமாகும். இதன்மூலம் உங்களுக்கு பல் சொத்தையோ, ஈறு பிரச்னைகளோ வராமல் தடுக்கலாம்.