மழைக்காலத்தில் நம் சருமம் சந்திக்க நேரிடும் பிரச்சனைகளை கையாளும் வழிமுறைகள் !!

Update: 2024-10-17 11:10 GMT

உடல்நலம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

*மழைக்காலத்தில் வேறு விதமான வறட்சியை நம் தோல் சந்திக்க நேரிடும். உதடுகள் வெடிப்பது, உலர்ந்து போவது, போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.



*ஆகவே உங்கள் உதடுகளை வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு மசாஜ் செய்யலாம். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இயற்கையான நிறத்தை உதட்டிற்கு வழங்குகிறது. 


*தூங்கும் முன் லிப்ஸ்டிக்கை அகற்ற வேண்டும். இதிலுள்ள இரசாயனங்கள் உதடுகளில் உள்ள ஈரப்பதத்தை ஒரே இரவில் வெளியேற்றி அதனை வறட்சியடையச் செய்வதோடு வெடிப்பையும் உண்டாக்கும்.


*மழைக்காலத்தில் ஏற்படும் ஈரப்பதம் அரிப்பு மற்றும் பிற பூஞ்சை பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே நீங்கள் எழுந்தவுடன் உங்கள் முகத்தை எண்ணெய் இல்லாத ஃபேஸ் வாஷ் மூலம் சுத்தம் செய்து முகத்தில் உள்ள அழுக்குகளை அகற்ற வேண்டும். 


*அதேபோல் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைத் தடுக்கிறது. சுத்தப்படுத்துதல் தோலின் pH நிலைகளைக் கட்டுப்படுத்துவதால் வாரத்திற்கு 2 முறை நச்சுகளை அகற்ற வாரத்திற்கு இரண்டு முறை லேசான ஸ்க்ரப் பயன்படுத்தலாம்.


*மழைக்காலத்தில் ஒவ்வொரு நாளும் வைட்டமின் சி சீரம் பயன்படுத்துவதால் உடனடி நீரேற்றத்தை அளித்து சருமம் பளபளப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. புற ஊதாக் கதிர்களால் சருமத்தில் சேதமடைந்த செல்களை மீட்க வைட்டமின் சி உதவுகிறது.


*மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் இருப்பதால் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டாம் என நம்மில் பலரும் நினைப்போம், அது தவறு. சரும பராமரிப்பு வழக்கத்தின் இது மிக முக்கியமான ஒன்று.


*நீங்கள் தினமும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தினால் சருமமானது அதிகப்படியான எண்ணெயை உற்பத்தியை தடுத்து வறண்ட சருமம் ஏற்படுவதை தடுக்கிறது. மாய்ஸ்சரைஸிங் கிரீம் இல்லை என்றால் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், கற்றாழை உள்ளிட்ட இயற்கையான பொருட்களையும் பயன்படுத்தலாம்.


*கால நிலை, உணவுமுறை, மருந்துகள், ஹார்மோன்கள், தோலின் வகை ஆகியவை கருத்தில் கொண்டு மாய்ஸ்சரைஸரை தேர்வு செய்ய வேண்டும்.

Tags:    

Similar News