உடல் எடையை குறைக்க வேண்டுமா ? அப்போ சக்கரை மற்றும் உப்பை தவிர்க்க வேண்டுமா !
உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதற்காக நீங்கள் நிறைய மெனக்கெடல்களை செய்ய வேண்டியிருக்கும். சில சமயம் வெயிட்டை குறைக்க பல முயற்சிகளில் ஈடுபடுவோம். ஆனால் பலன் ஒன்றும் இருக்காது. உடல் எடையைக் குறைக்கும் பயணத்தை நீங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பு நாங்கள் சொல்லும் ஐடியாக்களை பின்பற்றுங்கள். இந்த வழிமுறைகள் உங்கள் சோம்பேறித்தனத்தை ஒழித்து வெயிட்டை குறைக்க உதவி செய்யும்.
நீங்கள் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது உங்கள் உணவை முற்றிலுமாக குறைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. உங்களுக்கு பிடித்த கார்போ ஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் அடங்கிய உணவை போதுமான அளவு நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.உங்களுக்கு பிடித்த உணவுகளை உங்கள் உணவை பகுதி பகுதியாக எடுத்துக் கொள்ளுங்கள். குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமற்ற உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளாதீர்கள். சாப்பிடும் போது எப்பொழுதும் கவனம் இருக்க வேண்டும்.
நீங்கள் உண்ணும் உணவு உங்களுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. நன்கு மென்று விழுங்காமல் உணவை சாப்பிடுவது கூட நீங்கள் உணவை எடுத்துக் கொள்ளும் போது முழுமையான ஈடுபாட்டுடன் எடுத்துக் கொள்ளாதபோது உங்கள் மூளை அனுப்பும் சிக்னல் தடைபடுகிறது. இதனால் நீங்கள் அதிகமான உணவை எடுத்துக் கொள்ள நேரிடலாம். இதனாலும் உங்கள் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது.
தேவையில்லாத ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் வகைகளை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக ஆரோக்கியமான நட்ஸ் வகைகளை நீங்கள் எடுத்துக் கொண்டு வரலாம்.
நட்ஸ் வகைகள், அக்ரூட் பருப்புகள், பாதாம் போன்ற பருப்புகளை நீங்கள் எடுத்துக் கொண்டு வரலாம். இந்த மாதிரியான நட்ஸ் வகைகள் உங்கள் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
மேலும் உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின்கள் மற்றும் மினரல்களும் உடலுக்குக் கிடைக்கும்.
சர்க்கரை நிறைந்த பழச்சாறுகள், சோடா மற்றும் ஆல்கஹாலை தவிருங்கள். இவை எல்லாமே உங்கள் கலோரிகளை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதற்குப் பதிலாக தண்ணீர், சர்க்கரை இல்லாத தேநீர், சர்க்கரை இல்லாத பழச்சாறுகள் போன்ற குறைந்த கலோரி பானங்களை எடுத்துக் கொள்ளலாம்.