மூச்சுத் திணறல் எதனால் வருகிறது? அதை எப்படி தடுக்கலாம்!!!
மூச்சு அடைப்பு அல்லது மூச்சுத் திணறல் பொதுவாக சளி மிகுதியால் ஏற்படுகிறது. இந்த நோய் குணமாகவும் வராமல் தடுக்கவும் உடலில் சளி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாடி சுத்தி என்னும் மூச்சு பயிற்சி மேலும் அதிகாலையில் நல்ல காற்றோட்டமான இடத்தில் செய்து வர வேண்டும்.
சளியை உண்டாக்கும் உணவான அசைவ உணவு பால் மற்றும் நெய் ,தயிர் ஆகிய பால் பொருட்கள் உப்பிட்ட சமைத்த தானிய உணவு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மூன்று வேலைகளும் இயற்கை உணவு உண்பது நல்லது.
இல்லை எனில் காலை இரவு இயற்கை உணவும் பகலில் ஒரு வேலை மட்டும் உப்பில்லாத அல்லது உப்பு மிகக் குறைவாக சமைத்த காய்கறிகள் கீரைகள் எண்ணெயில்லா சப்பாத்தி உண்டு வரலாம்.
வெறும் வயிற்றில் கண்டங்கத்திரி, நெல்லிக்காய் சாறு, துளசி, தூதுவளை ,கரிசலாங்கண்ணி போன்ற மூலிகைச் சாறுகளும் அருந்தி வரலாம். நோய் குணமாகும் வரை தினமும் உடற்பயிற்சிகள் செய்து வர வேண்டும். தினம் எனிமாக்குவளை மூலம் எனிமா எடுத்து மலச்சிக்கல் ஏற்படாமல் செய்து வர வேண்டும்.
இடையே இடையே பசித்த பொழுதெல்லாம் பழச்சாறுகள் மற்றும் இயற்கை பானங்கள் மற்றும் அருந்தி உண்ணா நோன்பு இருக்கலாம். கபாலபதி பஸ்திரிகா பயிற்சிகள் அவசியம் செய்து வர வேண்டும்.