வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது.

Update: 2024-01-22 08:34 GMT


திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் வெளிநாட்டு பறவைகள்

வருகை அதிகரித்துள்ளது.


திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வடநாட்டு பறவைகள் மற்றும் வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக உணவுக்காகவும், இன விருத்திக்காகவும் வருவதுண்டு. அதேபோல இந்த ஆண்டும் அதிக அளவில் வடநாட்டு பறவைகளும், வெளிநாட்டு பறவைகளும் வந்துள்ளன. வத்தலக்குண்டு பகுதியில் உள்ள குன்னுவாரன்கோட்டை கண்மாய், வெங்கடாஸ்திரி கோட்டை கண்மாய் உள்பட ஐந்து கண்மாய்களுக்கு அதிகாலை சென்று பைனாகுலர், கேமரா உதவியோடு ஆய்வு செய்தனர்.வெளிநாடுகளில் இருந்து 18 வகையான பறவைகள் வந்திருந்தது.

Similar News