குஜராத்தில் மர்ம காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு!!
குஜராத்தில் மர்ம காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இந்தநிலையில் புஜ் மாவட்டத்தில் பலர் திடீரென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த மர்ம காய்ச்சல் வேகமாக பரவியதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. கட்ச் லக்பத் மற்றும் அப்தாசா தாலுகாவில் உள்ள 7 கிராமங்களில் கடந்த 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மொத்தம் 11 பேர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பேர் குழந்தைகள். இந்தநிலையில் குஜராத் மாநில சுகாதார மந்திரி ருஷிகேஷ் பட்டேல், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதில் புஜ் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.