சத்தீஸ்கர்: என்கவுண்டரில் 2 பெண்கள் உட்பட 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!!
சத்தீஸ்கரில் நடந்து வரும் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் இன்று 14 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரில் நடந்து வரும் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் இன்று 14 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கரியாபண்ட் மாவட்டத்தில் சத்தீஸ்கர்-ஒடிசா எல்லையில் உள்ள மெயின்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டில் நேற்று [திங்கள்கிழமை] இரவும் இன்று [செவ்வாய்க்கிழமை] அதிகாலையும் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 14 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். என்கவுண்டரை உறுதிப்படுத்திய கரியாபண்ட் காவல் கண்காணிப்பாளர் நிகில் ரகேச்சா, திங்கள்கிழமை மாலை மெயின்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காடுகளில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இரண்டு பெண் நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன. கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. வெடிமருந்துகள் மற்றும் ஐஇடிகள், செல்ப்-லோடிங் ரைபிள் உள்ளிட்டவை இதில் அடங்கும். அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒரு கோப்ரா ஜவான் வீரருக்கு ராய்ப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் நடந்து வரும் துப்பாக்கிச்சூட்டினால் நக்சல் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.