அதானி குழும பங்குகள் மதிப்பு ரூ.53,000 கோடி சரிவு!

Update: 2024-08-12 05:57 GMT

அதானி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச்- 2023 ஆம் ஆண்டில் இருந்து அதானி குழுமம் முறைகேடான வகையில் தனது நிறுவனத்தின் பங்குகளின் விலையை உயர்த்துவது குறித்து பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வெளியிட்ட முதல் அறிக்கையின் வாயிலாக அதானி சாம்ராஜ்ஜியத்தின் மொத்த சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலருக்கு கீழ் சரிந்தது.

அதானி குழும பங்குகளின் விலையை மறைமுகமாக உயர்த்த கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி வாயிலாக முறைகேடாக வெளிநாட்டு நிறுவனங்களைப் பயன்படுத்தியது குறித்து ஹிண்டன்பர்க் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வினோத் அதானி முறைகேடாகப் பயன்படுத்தும் ஒரு பண்டில் செபி தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் முதலீடு செய்து பங்குகளை வைத்துள்ளதாக அறிவித்தது.

2023 அறிக்கையின் மூலம் ஹிண்டன்பெர்க் அதானி குழுமத்திற்கு சுமார் 100 பில்லியன் டாலர் வரையிலான இழப்பை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், தற்போதைய அறிக்கை எந்த அளவுக்கு மோசமாகப் பாதிக்கும் என்பது குறித்து முதலீட்டாளர்கள் மிகவும் அச்சத்துடன் இன்றைய வர்த்தகத்தைத் துவங்கியுள்ளனர். திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கும் போதே சரிவுடன் துவங்கினாலும் அச்சப்படும் அளவுக்கு இல்லை என்பது முதலீட்டாளர்களுக்கு ஒரு குட்நியூஸ் என்று தான் சொல்ல வேண்டும். 9.50 மணிக்கு சென்செக்ஸ் குறியீடு 277.81 புள்ளிகள் அல்லது 0.35 சதவீதம் சரிந்து 79,428.10 புள்ளிகளைத் தொட்டு உள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 112.15 புள்ளிகள் சரிந்து 24,255.35 புள்ளிகள் சரிந்து 24,255.35 புள்ளிகளை எட்டியுள்ளது.


Tags:    

Similar News