கங்கனா ரனாவத் வெற்றியை எதிர்த்த வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Update: 2024-07-25 05:41 GMT
கங்கனா ரனாவத்
மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிட்டு நடிகை கங்கனா ரனாவத் வெற்றி பெற்றார். இந்நிலையில் கங்கனா ரனாவத் வெற்றியை எதிர்த்து கின்னார் மாவட்டத்தை சேர்ந்த லயக் ராம் நெகி இம்மாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
லயக்ராம் நெகி என்பவர் மண்டி தொகுதியில் தனது வேட்பு மனு தவறாக நிராகரிக்கப்பட்டதாக அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
தனது ஆவணங்களை ஏற்று வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதித்து இருந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்றும் தேர்தலை ஒதுக்கி வைக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜோத்ஸ்னா ரேவால், ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு வழக்கு தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் பதிலளிக்க நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.