ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டின் முன்புறம் இடிப்பு!

Update: 2024-06-15 10:14 GMT

 ஜெகன் மோகன் ரெட்டி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், வீட்டின் முன்புறம் இடிக்கப்பட்டுள்ளது.

நடைபாதையை மறித்து பாதுகாவலர்கள் தங்குவதற்காக அறை கட்டப்பட்டிருந்ததாக புகார் எழுந்த நிலையில் ஹைதராபாத் மாநகராட்சிக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் புல்டோசர் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.

சமீபத்திய ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News