ஹோண்டா அமேஸ் Vs மாருதி சுசூகி டிஸைரின் புதிய அப்டேட் !

Update: 2024-05-21 05:07 GMT

ஹோண்டா அமேஸ்

காம்பாக்ட் செடான் பிரிவு நாட்டின் மிகவும் பிரபலமான பிரிவுகளில் ஒன்றாகும். இந்த பிரிவு முக்கியமாக ஹேட்ச்பேக் பிரிவுகளில் மேம்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. இந்த கார்கள் காருக்கு கூடுதல் நடைமுறை மற்றும் வசதியை வழங்குகின்றன. இந்த பிரிவில் மிகவும் பிரபலமான இரண்டு கார்கள் மாருதி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் மற்றும் டிசையர் விற்பனையில் முன்னணியில் உள்ளன. இந்த ஹோண்டா அமேஸ் (Honda Amaze) மற்றும் மாருதி சுசூகி டிஸைரின் (Maruti Suzuki Desire)அடுத்த தலைமுறை மாடல்கள் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

ஹோண்டா அமேஸ் - ன் அம்சங்கள் என்னவாக இருக்கும் !

முதலில் இதில் வரப்போகின்ற மாற்றங்கள் பற்றி பேசுவோம். மேம்படுத்தப்பட்ட ஹெட்லைட் செட்டப், புதுப்பிக்கப்பட்ட போனெட், மாற்றியமைக்கப்பட்ட முன்பக்க ஃபேஸியா போர்டு, சிறந்த ரோடு பிரசென்ஸ் ஆகியவற்றை புதிய அமேஸில் எதிர்பார்க்கலாம். ஹோண்டாவின் பெரிய செடான் போன்ற அதே உணர்வு இதிலும் கிடைக்கும் என எதிர்பார்ப்பு நிலவினாலும் நிறுவனத்தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இணையத்தில் கசிந்துள்ள சில தகவல்களை வைத்து பார்த்தோமென்றால், ஹோண்டாவின் எலிவேட் மற்றும் சிட்டியின் அதே கட்டுமானம் தான் இதிலும் இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் மற்ற இரண்டு கார்களை விட அமேஸின் வீல்பேஸ் குறைவாக இருக்கும்.



இஞ்சினைப் பொறுத்தவரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முன்பிருந்த அதே 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இஞ்சின் தான். இது அதிகபட்சமாக 88 bhp பவரையும் 110Nm இழுவிசையும் கொண்டுள்ளது. கியர்பாக்ஸை பொறுத்தவரை, 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு CVT ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஸன் உள்ளது.

மாருதி டிஸைரில் என்ன எதிர்பார்க்கலாம்?

விரைவில் அறிமுகமாகவுள்ள டிஸைர் கார், தற்போது விற்பனைக்கு வந்துள்ள புதிய ஸ்விட் காரை அச்சு அசல் அப்படியே ஃபாலோ செய்துள்ளது. நான்காம் தலைமுறை ஹேட்ச்பேக் மாடலான ஸ்விஃப்டின் வடிவமைப்பு சார்ந்த விஷயங்கள் அனைத்தும் புதிய டிஸைரிலும் எதிர்பார்க்கலாம். மேலும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சில டிரெண்டிங் வசதிகளும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.      


புதிய டிஸைர் காரில் 9.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், இந்தப் பிரிவு கார்களிலேயே முதல்முறையாக சன்ரூஃப், வயர்லஸ் சார்ஜர், புதுப்பிக்கப்பட்ட டாஷ்போர்டு போன்ற பல மேம்படுத்தப்பட்ட வசதிகளை எதிர்பார்க்கலாம்.இஞ்சினைப் பொறுத்தவரை, புதிய 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் Z சீரிஸ் இஞ்சின் பொறுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 80 bhp பவரையும் 112Nm இழுவிசையும் கொண்டுள்ளது.

Tags:    

Similar News