அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் - உச்சநீதிமன்றம்
Update: 2023-11-07 08:30 GMT
பட்டாசு வெடிப்பது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காற்று, ஒலி மாசுவை தடுக்க உரிய நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் மேம்படுத்தப்பட்ட ஃபார்முலாவை கொண்ட பேரியம், சரவெடிகளை தயாரிக்க அனுமதி கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிப்பட்டுள்ளன.
"பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி என உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுகளில் தலையிட விரும்பவில்லை" என தெரிவித்துள்ளது.