கேரளாவில் திடீர் நிலநடுக்கம் - பொதுமக்கள் பீதி!

ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகள் பதிவாகி உள்ளதாக நிலநடுக்க ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2024-06-15 08:54 GMT

கேரளாவில் நிலநடுக்கம் 

கேரள மாநிலத்தில் திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் இன்று காலை திடீரென்று நிலநடுக்கம் உணரப்பட்டது. பாலக்காடு மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள மேல் திருமிடக்கோடு, நகலாசேரி,காகத்திரி, கோட்டை பாடம்,மாட்டுப் புள்ளி,கொத்தச்சிரா,எழுமாங்காடு,கப்பூர், குமரநெல்லூர் உள்ளிட்ட கிராமங்களிலும் திருச்சூர் மாவட்டத்தில் குன்னங்குளம்,எருமா பெட்டி மற்றும் பழஞ்சி உள்ளிட்ட கிராமங்களிலும் சுமார் 4 வினாடிகள் நில அதிர்வு ஏற்பட்டது.

இதனால் பூமிக்கு அடியில் இருந்து சத்தம் கேட்ட நிலையில் வீடுகளில் இருந்த பொருட்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் தற்போது வரை கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் பூமிக்கு அடியில் 7 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மற்றும் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News