தொடர்ந்து அபாய நிலையில் நீடிக்கும் டெல்லி காற்று மாசு!!

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து அபாயகர நிலையிலேயே தொடர்கிறது.

Update: 2024-12-20 08:03 GMT

delhi

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து அபாயகர நிலையிலேயே தொடர்கிறது. இன்று காலை நிலவரப்படி டெல்லி காற்று மாசின் அளவு 433 ஆக பதிவானது. இந்த தகவலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தியாவில் காற்றின் தரக் குறியீடு பூஜ்ஜியத்தில் இருந்து 50 வரை இருந்தால் "நல்லது" என்றும் 51 முதல் 100 வரை இருந்தால் "திருப்திகரமானது" என்றும் 101 முதல் 200 வரை இருந்தால் "மிதமானது" என்றும் 201 முதல் 300 வரை இருந்தால் "மோசமானது" என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் "மிகவும் மோசமானது" என்றும் 400 முதல் 500 வரை இருந்தால் "அபாயகரமானது" என்றும் வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இன்று டெல்லியில் காற்றின் தரம் அபாயகர அளவில் இருந்தது. அங்கு இன்றைய வெப்பநிலை 7.5 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலையை பொருத்தவரை பகலில் மேகமூட்டமாக காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News