மாயனூரில் வாகன தணிக்கையின் போது குட்கா வேட்டை

Update: 2023-11-05 14:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரூர் மாவட்டம் மாயனூர் காவல் ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மாயனூர் அன்பு நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மாருதி காரை சோதனை செய்தபோது, அந்த காரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது. மேலும், ரூ.2.95லட்சம் கைப்பற்றப்பட்டது.

காரில் வந்த கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா கட்டளையைச் சேர்ந்த அருண்குமார், வீரராக்கியத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன், மாயனூரை சேர்ந்த அரவிந்த் ஆகியோரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வாங்கி வந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சில்லரை விற்பனை செய்யும் காஜா மொய்தீன் என்பவருக்கு கொடுத்துவிட்டு, பணம் பெற்று வந்தது தெரிய வந்தது. இந்த தகவலின் அடிப்படையில் காஜா மொய்தினையும் கைது செய்து, அவரிடமிருந்து 13 சாக்கு மூட்டைகளில் இருந்து 124 கிலோ எடை உள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இந்த விற்பனைக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நான்கு பேர் மீதும் மாயனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். சிறப்பாக செயல்பட்டு குட்கா வேட்டை நடத்திய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை யாரேனும் விற்பனை செய்வதாக தெரிய வந்தால் உடன் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தொலைபேசி எண் 04324296299- என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News