கல்லூரி தற்கொலை விவகாரத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

கல்லூரி தற்கொலை விவகாரத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-23 10:27 GMT

மாவட்ட எஸ். பி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கல்லூரி மாணவர் தற்கொலை குறித்து, தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி எச்சரித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேதாராண்யத்தை சேர்ந்த செல்வராசு என்பவரின் மகன் விஜன் (18). இவர், நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், எர்ணாபுரம் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில், டிப்ளோ இன் அக்ரிகல்சர் டெக்னாலஜி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

அவர் அதே கல்லூரி வளாகத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கியுள்ளார். மாணவர் விஜயன் கடந்த 18ம் தேதி, கல்லூரி ஹாஸ்டலில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சம்மந்தமாக விஜயனின் தந்தை செல்வராசு என்பவர், வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவர் விஜயனின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு வீடியோ பதிவுடன் கூடிய பிரேத பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அந்த மாணவரது உடல் அவரது தகப்பனாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது சம்மந்தமாக வேலகவுண்டம்பட்டி போலீசார் முறையாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மாணவர் இறப்பு சம்பந்தமாக தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் பரவி வருவதாக தெரியவருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். மேலும் வதந்திகள் பரப்புவோர் பற்றிய விவரங்கள் போலீஸ் துறையின், சமூக ஊடக பிரிவு மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வதந்தியை பரப்புவேர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News