மழைநீர் தேக்கத்தால் நோய் பரவும் அபாயம்
நோய் பரவும் அபாயம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
By : King 24X7 News (B)
Update: 2023-11-23 19:02 GMT
சிவகங்கை நகராட்சியின் மையப்பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் பழமையான தெப்பக்குளம் உள்ளது. இது சிவகங்கை நகரின் முக்கியமான நீர் ஆதாரமாக உள்ளது. தெப்பக்குளத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை சுற்றிலும் இருந்து வெளியேறும் மழைநீர் செல்வதற்கு வடிகால் அமைக்கப்பட்டது.
தற்போது இந்த வடிகாலில் செடி, கொடிகள் வளர்ந்து காடுகள் போன்று காணப்படுகிறது. இதனால் மழைநீர் செல்வதற்கு வழியின்றி தேங்கி கிடப்பதால் கழிவுநீராக மாறியுள்ளது. இதனால் நகர் பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதற்கு காரணமாக இருக்கிறது. ஆகையால் நகராட்சி நிர்வாகம் மழைநீர் வடிகால்களில் உள்ள செடி, கொடிகளை அகற்றி பராமரிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்