நாமகிரிப்பேட்டையில் கிராம வேளாண் செயல்பாடுகள் : ஆட்சியர் ச.உமா ஆய்வு
நாமகிரிப்பேட்டையில் கிராம வேளாண் செயல்பாடுகள் : ஆட்சியர் ச.உமா ஆய்வு
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வட்டாரம், தொப்பப்பட்டியில் வேளாண்மைத்துறையின் சார்பில் 2023-24 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.
தேசிய நீடித்த வேளாண் இயக்கம் ( மானாவாரி பகுதி மேம்பாடு ) மூலம் நடப்பு ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் வயலில் மாடு வளர்ப்பு, மண்புழு படுகை, தேனி வளர்ப்பு, சோளம் பயிர்சாகுபடி மற்றும் பழகன்றுகள் நடவு உள்ளிட்ட விவசாய பணிகள்,
அட்மா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் மஞ்சள் வண்ண அட்டை பொறிகள் - செயல் விளக்கத்திடலை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தரிசு நிலத் தொகுப்பு, மானியத்தில் சொட்டுநீர் பாசனம், 776 மாங்கன்றுகள் நடவு, 200 மகாகனி, 320 தேக்கு கன்றுகள் நடவு, ஊடுபயிராக நிலகடலை, சாமை மற்றும் மரவள்ளி சாகுபடி உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.