இரணியல் ரயில் நிலையம் அருகில் போராட்டம்

இரணியல் ரயில் நிலையம் அருகில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-11-25 09:13 GMT
ரயில் நிலையம் அருகே குவிந்த மக்கள்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் நாகர்கோவில் - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதைக்காக நெய்யூர், பரம்பையில் ரயில்வே மேம்பாலம் பணிகள் நடந்து வருகிறது.  ஆமை வேதத்தில் நடந்து வரும் இந்த மேம்பால பணியால் 7குக்கிராமங்கள் துண்டிக்கும் நிலை உருவாகும் என  அப்பகுதி மக்கள் பரம்பை ரயில்வே மேம்பாலம் அருகில் குவிந்து நேற்று மாலை  பணிகளை தடுத்து நிறுத்தினர்.    

  சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த  ரயில்வே முதுநிலை செயற்பொறியாளர் பமிலா,  ரயில்வே நிலமெடுப்பு பிரிவு தாசில்தார் ஜெகதா, இரணியல் சப். இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் உள்ளிட்டோர் போராட்டக்காரர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தினர்.      

பேச்சு வார்த்தையில் 10 நாட்களுக்குள் ரயில் நிலையம் வழியாக இணைப்பு சாலை அமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் மீண்டும் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News