கால்நடை மருத்துவக் கல்லூரியில் செல்லப்பிராணிகளுக்கான அறுவை சிகிச்சை பயிற்சி

கால்நடை மருத்துவக் கல்லூரியில் செல்லப்பிராணிகளுக்கான அறுவை சிகிச்சை பயிற்சி நடைபெற்றது.

Update: 2023-12-03 09:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசலில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மற்றும் மருத்துவக்கல்லூரி வளாகத்தில், நேற்று அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கதுறையின் சார்பில் செல்லப் பிராணிகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செயல்முறை பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமினை கால்நடை மருத்துவகல்லூரி முதல்வர் இளங்கோ தொடங்கி வைத்து, பயிற்சியாளர்களுக்கு கையேடுகளை வழங்கினார். முகாமில்மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த கால்நடை துறைபேராசிரியர்களும், கால் நடை மருத்துவர்களும் அரசு மற்றும் தனியார்துறை கால்நடைமருத்துவர்களும் கலந்து கொண்டனர்.

7முகாமில் செல்ல பிராணிகளுக்கு கருத்தடை செய்ய தயார்படுத்துதல், மயக்க மருந்து கொடுத்தல், அறுவை சிகிச்சைக்கு பின் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.இதனை அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கத்துறை தலைவர் செந்தில்குமார் அளித்தார். முகாமில் 25க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News