பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!
தூத்துக்குடி சிதம்பரனார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.;
By : King 24x7 Website
Update: 2023-12-04 17:05 GMT
தூத்துக்குடி சிதம்பரனார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி ரெங்கநாதபுரத்தில் அமைந்துள்ள சிதம்பரனார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, 56 மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் பள்ளி செயளாளர் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம், தலைமை ஆசிரியர் சங்கரேஸ்வரி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வள்ளியம்மாள், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், சோமநாதன், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டச்செயலாளர் கங்காராஜேஷ், மற்றும் மணி, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.