பைக்கில் சாகசம் :  தடுத்த போலீசை தள்ளிவிட்ட வாலிபர்கள்

Update: 2023-12-26 09:40 GMT
பைல் படம்

குமரி மாவட்டம்   கருங்கல் பகுதியில் நேற்று போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது ஒரு பைக்கில் இரு வாலிபர்கள் நின்றவாறு சாகசம் செய்து பைக்கை  வேகமாக ஓட்டி வந்தனர். போலீசார் கைகாட்டியும் நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.      

இதில் ஒரு போலீஸ்காரர் வாகனத்தின் சாவியை  எடுக்க முயன்ற போது, சாவி இல்லாமலேயே பைக்கை ஓட்டியது தெரிய வந்தது. மட்டுமின்றி அந்த போலீசாரை பிடித்து கீழே தள்ளியுள்ளனர். 

Advertisement

 அப்போது போலீஸ்காரர் தடுமா தி கீழே விழுந்தார்.  இதை பார்த்த மற்ற போலீஸ்காரர் வாகனத்தை மடக்கினார். விசாரணையில் அவர்கள்  அதே பகுதி பிசியோதெரபி மாணவர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்து,  போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில்  வாகனத்திற்கு லைசன்ஸ், இன்சூரன்ஸ் உட்பட எந்த ஆவணமும் இல்லை என்பது தெரிய வந்தது.        

இதையடுத்து 15 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்திவிட்டு வாகனத்தை கொண்டு செல்ல கூறினர். ஆனால் இரவு வரை அவர்கள் வரவில்லை. பைக்கை ஆப் செய்ய சாவி  இல்லாததால் ஸ்டார்ட் செய்த  நிலையில் இரவு வரை இந்த பைக் காணப்பட்டது.

Tags:    

Similar News