ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நீச்சல்குளம்
By : King 24X7 News (B)
Update: 2023-12-28 13:07 GMT
நீச்சல் பழகும் காளைகள்
திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை அடிவாரத்தை சேர்ந்தவர் முருகன். கடந்த 40 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் இவர் தற்போது மரக்காளை, வீறிக்கொம்பு காளை, செவலக்காளை என 3 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இந்த காளைகளின் உடல் வலிமைக்காக தவிடு, உளுந்தம்குருணை, பருத்திவிதை, புண்ணாக்கு, பேரிச்சம்பழம் போன்ற ஊட்டச்சத்து உணவுகளை தினந்தோறும் வழங்கி வருகிறார்.
இதுதவிர காளைகளுக்கு நடைபயிற்சி, நீச்சல்பயிற்சி, ஓட்டப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் தனது ஜல்லிக்கட்டு காளைகளுக்காகவே தோட்டத்தில் பிரத்யேகமாக பெரியஅளவில் நீச்சல் குளத்தை கட்டி வைத்துள்ளார்.