ரயில் பயணிக்கு நெஞ்சு வலி, சிகிச்சைக்கு பின் சென்னை பயணம்

Update: 2023-12-29 13:05 GMT
ரயில் பயணிக்கு நெஞ்சு வலி சிகிச்சைக்கு பின் சென்னை பயணம்

திருச்செந்துாரில் இருந்து சென்னை வந்த விரைவு ரயில், தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால், ரயிலில் இருந்து வெளியேற முடியாமல், இரண்டு நாட்களாக பயணியர் தவித்தனர்.

இந்நிலையில், பயணியர் அனைவரும் மீட்கப்பட்டு, சிறப்பு ரயில் வாயிலாக, மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று காலை 10.30 மணிக்கு, இந்த சிறப்பு ரயில் மேல்மருவத்துார் அருகே வந்தபோது, 'எஸ்2' பெட்டியில் பயணம் செய்த சென்னை, வானகரம் பகுதியை சேர்ந்த முத்தையா என்பவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

Advertisement

இதையடுத்து, ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காலை 11: 45 மணிக்கு, செங்கல்பட்டு ரயில் நிலையத்தை அடைந்ததும், தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர், முத்தையாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சைக்கு பின் முத்தையாவில் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, அவர் அதே ரயிலில் சென்னை அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags:    

Similar News