நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

மாட்டுப் பொங்கலை ஒட்டி கால்நடைகளை அலங்கரிக்கும் நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-01-02 11:40 GMT
நெட்டிமாலைகள் 

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, ஒரத்தநாடு பகுதிகளில் உள்ள குளங்களில் நெட்டி கிடைக்கிறது. குளத்தில் இருந்து கொண்டுவரப்படும் நெட்டிகளை வெட்டி வெயிலில் பதப்படுத்தி காயவைக்கப்படுகிறது.

பின்னர் நெட்டிகளை பல்வேறு வடிவில் வெட்டி வர்ணசாயம் பூசப்படுகிறது. இந்த சாயம் திருத்துறைப்பூண்டி வேதாரண்யத்தில் தான் கிடைக்கிறது. பச்சை, மஞ்சள், சிவப்பு போன்றவை இதற்கு பிரதான வண்ணமாக பயன்படுத்தப்படுகிறது.

மாட்டுப் பொங்கலையொட்டி கால்நடைகளை அலங்கரிக்கும் நெட்டி மலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News