தென்காசிக்கு புறவழிச்சாலை அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை மனு

தென்காசிக்கு புறவழிச்சாலை அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2024-06-09 12:31 GMT

அமைச்சரிடம் மனு வழங்கல்

தென்காசி பாராளுமன்ற தொகுதி எம்பி ராணி ஸ்ரீகுமார் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது இதைத் தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தென்காசி மாவட்டம் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் தென்காசி புறவழிச் சாலை, சுரண்டை நகர புறவழிச்சாலை பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News