வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஆட்சியர் களஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியங்களில் "உங்களை தேடி, உங்கள் உஊரில்" என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் களஆய்வு மேற்க்கொண்டார்.

Update: 2024-06-20 09:40 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியங்களில் "உங்களை தேடி, உங்கள் உஊரில்" என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், களஆய்வு மேற்க்கொண்டார். மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களை தேடி, உங்கள் ஊரில்" திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, "உங்களை தேடி, உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியங்களில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்தும், கள ஆய்வு மேற்க்கொண்டார்.

அதன்படி இன்றையதினம் வேதாரண்யம் வட்டம் கோவில்பந்து கிராமத்தில் ஒரு இலட்சம் மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்க்கொண்டு, சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல்களின் இருப்பு, நெல்களின் தரம் மற்றும் நெல்களின் இருப்பு குறித்து பராமரிக்கப்பட்டுவரும் குறிப்பேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டான். வேதாரண்யம் வட்டம் புஷ்பவனம் கிராமத்தில் உள்ள இளந்தென்றல் நெகிழி மறுகழற்சி மையத்தில் குப்பைகள் பிரித்தெடுக்கும் முறைகள் குறித்தும், நெகிழி மறுசுழற்சி முறைகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் புஷ்பவனம் கிராமத்தில் உள்ள நலவாழ்வு மையத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்க்கொண்டார்.

அதனை தொடர்ந்து ஆறுகாட்டுத்துறை கிராமத்தில் மீன்வனம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் குறித்தும், மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரப்படும் பணிகள் குறித்தும் விசை படகில் சென்று ஆய்வு மேற்க்கொண்டார். பின்னர் ஆற்காட்டு துறையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக லிமிடெட் சார்பில் செயல்பட்டுவரும் மானிய விலை மசல் விற்பனை நிலையத்தில் ஆய்வு மேற்க்கொண்டு எரிபொருள் இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டார்.

மேலும் ஆறுகாட்டுத்துறை நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் வருகை, பதிவேடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்க்கொண்டார். ஆயக்காரன்புலம்-3 அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைகுழு தலைவர்கள், உறுப்பினர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாணவர்கள் இடைநிற்றலுக்கான காரணங்கள் குறித்தும்,

மாணவர்கள் இடைநிற்றலை தவிர்ப்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கினார். மேலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100%தேர்ச்சி பெற்று பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார். அதனை தொடர்ந்து வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், தமிழ்நாடு அரசு அளிக்கப்படும் திட்டங்கள் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் செயல்பட வேண்டும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

பின்னர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் ரூ.1,10,940/- மதிப்பீட்டில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திறன் பேசிகளையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.3.12,500/- மதிப்பீட்டில் 20 நபர்களுக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகைகளையும்,

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு ரூ.28,190/- மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களையும், தாட்கோ துறை சார்பில் ரூ.14.50,013/- மதிப்பீட்டில் 3 நபர்களுக்கு பெட்டிக்கடை, மின் சாதன விற்பனை நிலையம், சரக்கு வாகனம் போன்றவைகளையும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ரூ.12,50,000/- மதிப்பீட்டில் 50 நபர்களுக்கு முதலமைச்சர் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதிய வைப்புத் தொகை இரசீதுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்களஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் முதுநிலை மண்டல மேலாளர் .சிவப்பிரியா,

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.கா.சே.சுபாஷினி, மீன்வளத்துறை செயற்பொறியாளர் பீ.ராஜ்குமார், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News