கீழக்கணவாய் அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் கலெக்டர் ஆய்வு

கீழக்கணவாய் அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-23 08:53 GMT

விடுதியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கணவாய் அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியின் மிகவும் பிற்படுத்தப்படோர் நல மாணவியர் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளில் 3 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அவர்களை உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு விடுதி காப்பாளர் அழைத்துவந்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

அனைத்து மாணவிகளும் நல்ல நிலையில் இருந்ததால் அவர்கள் மீண்டும் கல்லூரி விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதையறிந்த மாவட்ட ஆட்சியர் கற்பகம் உடனடியாக கீழக்கணவாய் தொழில்நுட்பக்கல்லூரியில் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.மாணவிகளுக்கு என்ன உணவு வழங்கப்பட்டது, உணவில் என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டது.

உணவுப்பொருட்கள் தரமானதாக உள்ளதா என பார்வையிட்டு ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாணவிகளிடம் உடல்நலன் குறித்து கேட்டறிந்தார்.

Tags:    

Similar News