பயன்பாட்டுக்கு வந்த குடிநீர் ஊராட்சி மன்றதலைவருக்கு பாராட்டு
அரசு செய்திகள்
திருமயம் ஊராட்சியில் 14 ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ் சுமார் 8 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு சந்தைப்பேட்டை ரேஷன் கடை பகுதியில் நீண்ட காலமாக பயன்பாட்டுக்கு வராமல் இருந்த RO plant ஆனது கடும் முயற்சிக்கு பிறகு புதிய ஆழ்குழாய் மற்றும் மோட்டாருடன் கூடிய சுமார் ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பொருட்செலவில் புணரமைக்கப்பட்டு திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த குடிநீரை பயன்படுத்தி கொண்ட பொதுமக்கள், வியாபாரிகள் திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தருக்கு அப்பகுதி பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.