பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

வழிபாடு

Update: 2024-07-18 01:11 GMT
கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் பத்ரகாளியம்மன், பெரியாண்டச்சி அம்மன், காட்டேரி அம்மன் சுவாமிகள் இந்த கோவிலில் உள்ளன. பத்ரகாளியம்மனை வழிபட்டால், வேண்டிய வரம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமண தடை நீங்கும். மரண பயத்தை போக்கி நல்வாழ்வு கிடைத்திட இந்த கோவிலில் நடக்கும் வழிபாட்டில் பங்கேற்க வேண்டும். கள்ளக்குறிச்சி அடுத்த கலையநல்லுார் வயல்வெளியில் தானாக தோன்றிய ஐந்தரை அடி உயரத்தில் சாந்த ரூபம் கொண்ட பத்ரகாளியம்மன் சிலை இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரதி வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பில்லி, சூனிய, செய்வினை நிவர்த்தி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். சித்திரை மாத சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. பிரதி அமாவாசை தோறும், தோஷ நிவர்த்திக்கான மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகமும் இங்கு நடத்தப்பட்டு வருகிறது.

Similar News