கூட்டப்பள்ளியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பால் பரபரப்பு

கூட்டப்பள்ளியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பால் பரபரப்பு

Update: 2024-07-20 07:27 GMT
திருச்செங்கோடு கூட்டப் பள்ளியில் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்க வேண்டாம் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். திருச்செங்கோடு வருவாய் கோட்டத்திற்கு உட் பட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. வருவாய் கோட் டாட்சியர் சுகந்தி தலைமை வகித்தார். திருச்செங்கோடு வேளாண் உதவி இயக்குநர் லோகநாதன் வரவேற்றார். பிடிஓ சுரேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், உதவி வேளாண் இயக்குநர் கள் ஜெயமணி, ராதாமணி, ஜெயமாலா, யுவராஜ், சுதா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் சுகன்யா, சின்னதுரை, ஜெயப்பிரபா, தமிழ்செல்வன், பிரகாஷ், நகரமைப்பு அலு வலர் ஸ்ரீதர், பட்டு வளர்ச்சித் துறை அலுவலர்கள், கால்ந டைத்துறை டாக்டர்கள், வேளாண் வணிக அலுவ லர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், விவசாயிகள் பேசுகையில், தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு ஆகியவற்றை அழிக்கவேண் டும். தேனீக்கள் வளர்க்க மரப்பெட்டி வழங்க வேண் டும். தெருநாய்கள் கோழி, ஆடுகளை கடித்து விடுவ தால், அவற்றை அப்புறப்ப டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கொல்லப்பட்டி நடே சன் பேசுகையில், தங்கள் விவசாய நிலங்களில் மழை விவசாயிகள் வலியுறுத்தல் திருச்செங்கோடு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் நடந்தது. நீர், கழிவு நீர் தேங்காமல் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும், கால்நடைகளை தாக்கும் அம்மை நோயை கட்டுப்படுத்த வேண்டும். தங்களுக்கு வழங்கிய கரும்பு ரகம் சரியான மகசூலை தர வில்லை என்றார். பெரும்பா லான விவசாயிகள் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக் காததால், மற்ற மாநிலங்க ளில் உள்ளது போல 100நாள் வேலைத்திட்ட தொழிலாளர் களை, விவசாய வேலைக்கு அனுப்ப வேண்டும். அதற்கு விவசாயிகள் கூடுதலான கூலி தரவும் தயாராக உள்ளனர் என்றனர். திருச் செங்கோடு கூட்டப்பள்ளி, அய்யகவுண்டம்பாளையம், எளம்புளியாம்பாளையம், வரகூராம்பட்டி விவசாயி கள் கணேசன் தலைமையில் வந்து, கூட்டப்பள்ளி ஏரிக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்ககூடாது என மனு கொடுத்தனர். ராசிபுரத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்ததால், 2கி.மீ சுற்றளவுக்கு நிலத்தடி நீர் மாசுபட்டு விட்டது. விவசாய நிலங்கள் பாழாகிவிட்டது. அதிக ஈக்கள் உற் பத்தியாகி சுற்றுச்சூ ழல் கெட்டு துர்நாற்றம் வீசுவதால், மக்கள் குடி யிருக்க முடிவில்லை. தங்களுக்கு சுத்திகரிப்பு நிலையம் வேண்டாம் கூறினார். நகரமைப்பு அலுவலர் ஸ்ரீதர், சுத்திகரிப்பு நிலையம் ஓடைப்புறம் போக்கில் அமையும் என்றார். கோட்டாட்சியர் நகராட்சியுடன் கலந்து பேசி முடி வெடுக்கலாம் என்று கூறினார். இதனால் ஆவேசமடைந்த சிறு மொளசி கணேஷ் என்ற விவசாயி, ஊர் மக்கள் மற்றும் விவ சாயிகளைக்கூட்டி அவர்கள் கருத்தை கேட்டு, ஒரே நாளில் முடிவு எடுக்க வேண் டியதுதானே என்று கேட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News