சிதிலம் அடைந்த பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம்
சிதிலம் அடைந்த பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம்
திருச்செங்கோடு அருகே உள்ள உஞ்சனை பேருந்து நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறிய பாலம் சேதாரம் அடைந்து ஒரு வருடமாக யாரும் கண்டு கொள்ளாதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உஞ்சனை ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் உள்ள இந்த சாலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மேற்கொண்ட போது இவ்வூரின் வழியாக சாக்கடை கழிவுநீர் வெளியேற சிறிய பாலம் அமைக்கப்பட்டது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே சிதலமடைந்து உள்ளதால் இவ்வழியே வரும் பள்ளி பேருந்துகள்.கனரக வாகனங்கள் வழியை செல்ல முடியாமல் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் பள்ளி நேரங்களில் மாணவர்களும். வேலை நேரங்களில் தொழிலாளர்கள் முதியோர்கள் என இவ்வழியை கடந்து செல்லும்போது கீழே விழுந்து கை கால்கள் சிராய்ப்பு ஏற்பட்டு பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இப்பாலத்திற்கு கீழ்புறம் 5 அடி ஆழம் இருப்பதால் எந்த நேரத்திலும் உயிர் சேதாரம் ஏற்பட வாய்ப்புள்ளது ஆகவே உடனடியாக நெடுஞ்சாலை துறை நிர்வாகம் தலையிட்டு இந்த பாலத்தை சரி செய்து தர வேண்டும் என பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.