வங்க தேசத்தில் தவிக்கின்ற மாணவர்களையும் தொழிலாளர்களையும் மீட்க எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை
வங்க தேசத்தில் தவிக்கின்ற மாணவர்களையும் தொழிலாளர்களையும் மீட்க எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை
வங்கதேசத்தில் தீவிரமடையும் வன்முறைகள் அளவு கடந்து அதிகமாகி கொண்டிருக்கிறது. வங்கதேசத்தில் படிக்கின்ற மாணவர்கள் சாலை மார்க்கமாக வந்து மேகாலயா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களின் இந்திய எல்லைகள் வழியாக இந்தியாவிற்குள் நுழைய வேண்டிய ஒரு மோசமான சூழல் நிலவுகிறது. மத்திய, மாநில அரசுகள் துரிதமாக அவர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பங்களாதேஷில் படிக்கின்ற மாணவர்கள் மட்டுமல்ல ஆயத்த ஆடைகள் தயாரிக்கின்ற தொழிலில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள். இன்னும் சூழ்நிலை மோசமாவதற்கு முன்பாக அவர்களையும் பத்திரமாக அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இணையதளம் சேவைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டு இருப்பதால் தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. இந்திய தூதரகத்தின் வாயிலாக இந்தியர்களை இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வர உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். என மத்திய அரசிற்கு எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்