பனப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் திடீரென ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
ஆய்வு
பனப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் சந்திரகலா ஆய்வு நெமிலி அடுத்த பனப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கம் பேரூராட்சி அலுவலக செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் சந்திரகலா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அலுவலர்களின் வருகை பதிவேடு மற்றும் அலுவலகம் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, மகப்பேறு பிரிவில் மருத்துவ பரிசோதனைகளுக்காக வந்த கர்ப்பிணி பெண்களிடம் உடல் நலம் குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் கழிவறை உட்பட அடிப்படை வசதிகளை ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பேரூராட்சி 15-வது வார்டில் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை யையம், தந்தை பெரியார் நகர் பகுதியில் ரூ.31.50 லட்சம் மதிப்பில் அம்ரூத் திட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா பணிகளையும், அருந்ததியர் பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையம், பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகளுக்கு சென்று, மாணவர்களுடன் உரையாடினார். மாணவர்களுக்கு தேர்வு தொடர்பான பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும், நெடும்புலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நியாய விலைக்கடையிலும் ஆட்சியர் சந்திரகலா ஆய்வு மேற்கொண்டார். இதில், பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், செயல் அலுவலர் குமார், வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.